ADDED : மே 10, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
பண்ருட்டி அடுத்த ஆத்திரிக்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன்,65; இவர், கடந்த மாதம் 30ம் தேதி அப்பகுதியில் உள்ள சக்கரபாணி என்பவரின் நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, ராமச்சந்திரனை மீட்டு புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின்பேரில், முத்தாண்டிகுப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.