/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமையாசிரியர் போக்சோவில் கைது
/
மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமையாசிரியர் போக்சோவில் கைது
மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமையாசிரியர் போக்சோவில் கைது
மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமையாசிரியர் போக்சோவில் கைது
ADDED : ஆக 09, 2024 04:32 AM

விருத்தாசலம்: மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளி தலைமை ஆசிரியர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம், எருமனுார் சாலையில் உள்ள வி.இ.டி., மேல்நிலைப் பள்ளியில், கடலுார் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த ஆரோக்யராஜ் மகன் எடில்பர்ட் பெலிக்ஸ், 40, தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார்.
இவர், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவி ஒருவருடன் வரம்பு மீறிய புகைப்படம், நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வெளியானது. ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் பள்ளிக்குள் நுழைந்து, தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கினர்.
தகவலறிந்த டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் தலைமையில் போலீசார் விரைந்து சென்று, தலைமை ஆசிரியரை மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
பின்னர், மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிருந்தா, சப் இன்ஸ்பெக்டர் சிவகாமி ஆகியோர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, தலைமை ஆசிரியர் எடில்பெர்ட் பெலிக்சை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமையில், பள்ளி வளாகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
கூட்டத்தில், , தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து ஹைடெக் ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாக டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ் தெரிவித்தார்.
டி.இ.ஓ., (மெட்ரிக்) இளங்கோவன் பேசுகையில், இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் ஏற்பட்டால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்.
பள்ளியில் புகார் பெட்டி வைக்கப்பட்டு, வாரம் ஒருமுறை கண்காணிப்படும் என்றார்.
சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.