/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செலவு செய்த பணம் கிடைக்கவில்லை தலைமை ஆசிரியர்கள் புலம்பல்
/
செலவு செய்த பணம் கிடைக்கவில்லை தலைமை ஆசிரியர்கள் புலம்பல்
செலவு செய்த பணம் கிடைக்கவில்லை தலைமை ஆசிரியர்கள் புலம்பல்
செலவு செய்த பணம் கிடைக்கவில்லை தலைமை ஆசிரியர்கள் புலம்பல்
ADDED : ஜூன் 11, 2024 11:25 PM
கடலுார் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மாணவர்களை தோட்டக் கலைத்துறையை பார்வையிட அழைத்து சென்று செலவு செய்த பணம் கிடைக்காததால் தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
மாவட்டத்தில் தேர்தெடுக்கப்பட்ட 50 நடுநிலைப்பள்ளிகள் தோட்டக்கலைத் துறைக்கு சென்று மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்தும், செடி, மரம் வகைகள், பயிரிடும் முறை, பராமரிப்பு,தோட்டக்கலை பயிர்கள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்க பயிற்சி அளிக்க வேண்டும் என கடலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகளுக்கு ஒர் சுற்றறிக்கை அனுப்பி மாணவர்கள் ஒருவருக்கு 200 வீதம் செலவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.
அதன் படி தலைமை ஆசிரியர்கள் ஒவ்வொரு பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத்தை செலவு செய்து தோட்டக்கலைத் துறைக்கு மாணவர்களை அழைத்து சென்று வந்தனர். தங்கள் செலவு செய்த பணத்தை முதன்மை கல்வி அலுவலகத்தில் தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்து கேட்டால் கல்வித்துறைக்கு இன்னும் பணம் வரவில்லை என தெரிவித்து வருகின்றனர்.
இதனால் மாணவர்களுக்கு செலவு செய்த பணம் கிடைக்க தாமதம் ஏற்படுவதால் தலைமை ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.