ADDED : மார் 02, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கோரணப்பட ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
குறிஞ்சிப்பாடி அடுத்த கோரணப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக உஷாராணி பணிபுரிந்தார். இவர், தனது முகநுாலில் தமிழக அரசு மற்றும் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக அவதுாறு கருத்துகளை பதிவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளிக் கல்வித்துறைக்கு புகார்கள் வந்தது.
அதன்பேரில், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.
விசாரணையில் புகார் உறுதியானதால் தலைமை ஆசிரியை உஷாராணியை 'சஸ்பெண்ட்' செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சுகப்பிரியா நேற்று உத்தரவிட்டார்.