/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மண்டப உரிமையாளர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு கூட்டம்
/
மண்டப உரிமையாளர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு கூட்டம்
மண்டப உரிமையாளர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு கூட்டம்
மண்டப உரிமையாளர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஜூலை 25, 2024 11:44 PM

கடலுார்: கடலுார் வட்டத்திற்குட்பட்ட திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் சமையல் பணியாளர்களுக்கு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில்  சுகாதார விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கடலுார் கூத்தப்பாக்கத்தில் நடந்த கூட்டத்திற்கு, வட்டார மருத்துவ அலுவலர் அமிர்தா தேவி தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்பு அலுவலர் பத்மநாபன் வரவேற்றார். சுகாதார மேற்பார்வையாளர் இருதயராஜ் முன்னிலை வகித்தார். இதில் திருமண மண்டபத்தில் சமையல் கூடத்திற்கு உணவு பாதுகாப்பு துறையின் கீழ் முறையான அனுமதி பெற வேண்டும், மருத்துவச்சான்று பெற்ற சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிக்கு அமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் குறித்து விளக்கினர்.
அப்போது, சுகாதார ஆய்வாளர்கள் குமார், குணசேகரன்,  கேசவராஜன், தமிழ்வாணன் உட்பட திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் சமையல் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

