/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் சுகாதார பணியாளர்கள் உறுதிமொழி
/
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் சுகாதார பணியாளர்கள் உறுதிமொழி
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் சுகாதார பணியாளர்கள் உறுதிமொழி
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் சுகாதார பணியாளர்கள் உறுதிமொழி
ADDED : ஜூன் 01, 2024 06:57 AM

விருத்தாசலம் : சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தில், விருத்தாசலம் நகராட்சி பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட மருத்துவ அலுவலரின் நேர்முக உதவியாளர் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
சுகாதார ஆய்வாளர்கள் முருகவேல், ராஜ்மோகன், முல்லைநாதன், பரத், ராஜ்குமார், அவினாஷ், தாண்டவராயன், சதீஷ், உதவியாளர் செங்குட்டுவன் உட்பட டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், களப்பணியாளர்கள், பயணிகள் பங்கேற்றனர்.
அதில், சர்வதேச புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து, பயணிகள், பொதுமக்களுக்கு புகையிலை பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை இல்லாத ஐந்து கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.