தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ என்.எல்.சி.,மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 

என்.எல்.சி.,மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 

என்.எல்.சி.,மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 


ADDED : ஆக 16, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பேப்பர் ஆர்டர் செய்தி அவசியம் சேர்க்கவும்.

மந்தாரக்குப்பம், ஆக. 17–

நெய்வேலி மந்தாரக்குப்பம் என்.எல்.சி., மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.

நெய்வேலி மந்தாரக்குப்பம் என்.எல்.சி., மேல்நிலைப்பள்ளியில் 1975–80 ம்ஆண்டு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 50 ஆண்டுகளுக்கு பின், நேற்று தனியார் மண்டபத்தில் நடந்தது.

இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள், மருத்துவர், பொறியாளர்,பேராசிரியர், என்.எல்.சி.அதிகாரிகள், ஆசிரியர்கள்,அரசு அதிகாரிகளாக பணிபுரிந்து ஒய்வு பெற்றுள்ளனர்.இவர்கள் அனைவரும் நீண்ட இடைவெளிக்கு பின் நேற்று தனியார் மண்டபத்தில் ஒன்று கூடி குடும்பத்துடன் நேரில் வந்திருந்து தங்களது கல்வி மற்றும் பணி அனுபவங்களை  பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், தங்களது பள்ளிக்கால நினைவுகள் தாங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.அதை தொடர்ந்து என்.எல்.சி., மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு  கல்வி ஊக்கத்தொகை,  கவுரவித்தல் , விருது மற்றும் நினைவு பரிசுகளை முன்னாள் தலைமையாசிரியர் மூர்த்தி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினர்.

நிகழ்ச்சியில் பாலாஜி, அசோக்குமார், சத்தீஷ்வரன், இராஜேஸ்வரன், போஸ்கோ,  மணிமாறன், மணவாளன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் அருள்ஜோதி. சக்திவேல், சாய்நாதன், சுந்தரராஜன், கணேஷ், திருவாசகம், சிவபால், ராஜேந்திரன், வரதராஜன், இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us