/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இந்து வியாபாரிகள் நலச்சங்க கூட்டம்
/
இந்து வியாபாரிகள் நலச்சங்க கூட்டம்
ADDED : செப் 15, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த ராமநத்தத்தில் இந்து வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், ஊராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினாார். இந்து வியாபாரிகள் நலச்சங்க பொருளாளர் செந்தில்ராஜன் முன்னிலை வகித்தார். இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிச்சைப்பிள்ளை வரவேற்றார். சிறப்பு விருந்தினராக நிதி ஆலோசகர் முத்துச்செல்வம் பங்கேற்று, ஜி.எஸ்.டி., குறித்து வியாபாரிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் செல்வம், ரவி, மாயகிருஷ்ணன் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.