/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனை; 3 பேர் கைது: ரூ.4 லட்சம் பறிமுதல்
/
குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனை; 3 பேர் கைது: ரூ.4 லட்சம் பறிமுதல்
குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனை; 3 பேர் கைது: ரூ.4 லட்சம் பறிமுதல்
குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனை; 3 பேர் கைது: ரூ.4 லட்சம் பறிமுதல்
ADDED : ஜூன் 19, 2024 01:33 AM

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்த, மளிகைக்கடைக்காரர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 4 லட்சத்து 11 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன், சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு பெ.பொன்னேரி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த மகேந்திரா எக்ஸ்யூவி 500 காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சாக்கு மூட்டைகளில் ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது.
காரில் வந்த கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அமர் பிரதீத் சிங்,31; ராஜஸ்தான் மாநிலம், தாஸ்பான் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா புராம்,26; ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அதில், பெண்ணாடம், வள்ளியம்மை நகர் மோகன், 43, என்பவரது மளிகை கடைக்கு 4 மூட்டை ஹான்ஸ், 3 மூட்டை விமல் பாக்கு, 3 மூட்டை புகையிலை பொருட்களை ரூ.47 ஆயிரத்து 400க்கு விற்றதை ஒப்புக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து அமர்பிதீத்சிங், கிருஷ்ணாபுராம், மோகன் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள், மற்றும் 3 லட்சத்து 64 ஆயிரம் ரொக்கம், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.