/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றம்
/
நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றம்
ADDED : ஆக 16, 2024 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சுதந்திர தினத்தையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில், தேசிய கொடி ஏற்றப்பட்டது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு வெள்ளி தாம்பூல தட்டில், தேசிய கொடியை வைத்து, சிவகாம சுந்தரி சமேத நடராஜர் பாதத்தில் சமர்ப்பித்து, சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, மேல தாளங்கள் முழங்க, பொது தீட்சிதர்கள், கோவில் பிரகாரத்தை வலம் வந்து, கீழ வீதியில், 142 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தின் உச்சியில் தேசிய கொடி ஏற்றினர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

