ADDED : மே 26, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: வீடு புகுந்து திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி புதிய காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி விமலா,33; இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டில் புகுந்த ஆவினங்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அழகுதுரை,22; விமலா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றார். திடுக்கிட்ட விமலா கூச்சலிட்டதும், அழகுதுரை அங்கிருந்த மொபைல் போனை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார்.
புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து அழகுதுரையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.