/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊர்க்காவல் படையில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
/
ஊர்க்காவல் படையில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : செப் 05, 2024 04:53 AM
கடலுார்: கடலுார் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கடலுார் எஸ்.பி., ராஜாராம் செய்திக்குறிப்பு;
கடலுார் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 19 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஆண்கள் 167 சென்டி மீட்டர் மற்றும் பெண்கள் 157 சென்டி மீட்டர் உயரம் இருக்க வேண்டும். எந்தவித குற்ற வழக்கிலும் ஈடுபடாமலும், ஜாதி, மத அரசியல் மற்றும் எந்தவித சங்கத்திலும் உறுப்பினராக இருக்க கூடாது.
20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை கடலுார் ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வரும் 17ம் தேதி காலை 10:00 மணி முதல் 23ம் தேதி மாலை 5:00 மணிக்குள் பெற்று பூர்த்தி செய்து பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட உரிய ஆவணங்களை இணைத்து கடலுார் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, கடலுார் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு, பணி அமர்த்தப்படுவார்கள். மாதத்திற்கு 5 நாட்கள் பணி வழங்கப்படும். நாளொன்றிற்கு 560 ரூபாய் வீதம் 2,800 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. அரசு ஊழியராக இருந்தால், துறை அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். கடலுார் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.