/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்விரோத தகராறு: 7 பேர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறு: 7 பேர் மீது வழக்கு
ADDED : செப் 01, 2024 11:31 PM
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த எஸ்.புதுக்குப்பத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்,35. இவரது சகோதரர் ஜெயராஜின் மனைவி ராஜலட்சுமி. இருவருக்கும் இடையே இடம் சம்மந்தமாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. ஜெயராஜிக்கு ஒதுக்கிய மனையில் வீடு கட்ட ராஜலட்சுமி பூமி பூஜை செய்தார்.
அப்போது ஜெயச்சந்திரனின் வீட்டை அளவீடு செய்தனர். இதை ஜெயச்சந்திரன் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த ராஜலட்சுமியின் ஆதரவாளர்கள் அதே பகுதி ஆனந்தராஜ், நடராஜன், செந்தில்குமார், இளங்கோவன் ஆகியோர் ஜெயச்சந்திரன், அவரது மனைவி சந்தியா, தாய் ராஜேஸ்வரி ஆகியோரை தாக்கினர்.
காயமடைந்த ஜெயச்சந்திரன், சந்தியா கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், இரு தரப்பையும் சேர்ந்த 7 பேர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.