/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீடு புகுந்து 4 சவரன் திருட்டு சிதம்பரத்தில் துணிகரம்
/
வீடு புகுந்து 4 சவரன் திருட்டு சிதம்பரத்தில் துணிகரம்
வீடு புகுந்து 4 சவரன் திருட்டு சிதம்பரத்தில் துணிகரம்
வீடு புகுந்து 4 சவரன் திருட்டு சிதம்பரத்தில் துணிகரம்
ADDED : ஆக 12, 2024 04:42 AM
சிதம்பரம்: சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, 4 சவரன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் போலீசார் தேடி வருகின்றனர்
சிதம்பரம் கனகசபை நகர் 4 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அரவிந்தன். 64; இவர், கடந்த 9ம் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். 10ம் தேதி காலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். விட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 4 சவரன் நகை மற்றும் ரூ. 5 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. திருடுபோன பொருட்கள் மதிப்பு ரூ. 1.25 லட்சம் ஆகும்.
புகாரின் பேரில் சிதம்பரம் நகர சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன் வழக்கு, மர்ம நபர்களை தேடி வருகிறார்.