/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோர்ட் உத்தரவுபடி வீடுகள் அகற்றம்
/
கோர்ட் உத்தரவுபடி வீடுகள் அகற்றம்
ADDED : பிப் 27, 2025 06:25 AM

பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த எஸ்.ஏரிப்பாளையம் கடலுார் - மடப்பட்டு மெயின்ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று காலை 10:00 மணிக்கு குருமூர்த்தி,70; தேவராசு மகன்கள் சரவணன், சிவக்குமார் ஆகிய 3 பேரும் ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த வீடுகள் அகற்றும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் துவக்கினர்.
ஆனால் குருமூர்த்தி தனக்கு வேறு இடமில்லை. இதனால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். அவர்களிடம் பண்ருட்டி தாசில்தார் ஆனந்த், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், நெடுஞ்சாலை உதவி பொறியாளர் கவிதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வீடு இல்லையெனில் வருவாய்த்துறையில் மனு செய்து இலவச மனை பெற அறிவுரை வழங்கினர். பின் பிற்பகல் 2;00 மணிக்கு பிறகு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது.

