/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இரவில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரியும் வீடுகள்
/
இரவில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரியும் வீடுகள்
இரவில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரியும் வீடுகள்
இரவில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரியும் வீடுகள்
ADDED : ஜூலை 22, 2024 01:18 AM
வடலுார் : குறிஞ்சிப்பாடி அருகே கல்குணம் கிராமத்தில் இரவில் மர்மமான முறையில் வீடுகள் தீப்பிடித்து எரியும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த கல்குணம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களாக இப்பகுதியில் உள்ள வீடுகள் இரவு நேரங்களில் திடீரென தீப்பிடித்து எரிகிறது. மர்ம நபர்கள் தீ வைப்பதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த மே மாதம் 24 ம் தேதி சிவகுமார் என்பவர் வீடு முதலில் தீப்பிடித்து எரிந்தது.
பின்னர் இரண்டு நாள் கழித்து அதே பகுதியில் உள்ள சக்திவேல் என்பவர் வீடும் தீப்பிடித்து எரிந்தது. கடந்த ஜூன் 24ம் தேதி உத்திராபதி,தொடர்ந்து ஜூலை 12ம் தேதி தேவநாயகி, 19ம் தேதி வைரக்கண்ணு ஆகியோர் வீடுகளும் தீப்பிடித்து எரிந்துள்ளது.
மேலும் கிராமத்தில் உள்ள ரமேஷ், வைத்தி, சரவணகுமார் என்பவரின் வைக்கோல் போர்களும் எரிந்துள்ளது. கல்குணம் கிராமத்தில் தொடர்ந்து இரவு நேரங்களில் வீடுகள் எரிந்து வருவது பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கிராமமக்கள் குறிஞ்சிப்பாடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடவியல், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்.