ADDED : ஜூன் 20, 2024 09:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே, மனைவியிடம் கண்டித்ததால் பூச்சிமருந்து குடித்த கணவர் உயிரிழந்தார்.
நடுவீரப்பட்டு அடுத்த அரசடிக்குப்பத்தை சேர்ந்தவர் தனவேல், 55; விவசாயி. கடந்த 18ம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததை மனைவி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனவேல், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். ஆபத்தான நிலையில் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று இறந்தார்.
நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.