/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்: காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத் உறுதி

ADDED : ஏப் 17, 2024 12:17 AM

கடலுார் : கடலுார் தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என, காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத் பேசினார்.
கடலுார் தொகுதி காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத் கடலுார் ஒன்றிய பகுதிகளான பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், கோண்டூர், துாக்கணாம்பாக்கம், திருப்பணாம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.
அப்போது, அவர் பேசுகையில், 'இண்டியா கூட்டணி உருவாக காரணம் தமிழக முதல்வர் ஸ்டாலின். இவர், மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கு இலவச பஸ் வசதி உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இதுபோன்ற பல திட்டங்களை நிறைவேற்ற மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். கடலுார் தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். தமிழக அரசின் சாதனை திட்டங்கள் தொடர என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார்.
தி.மு.க., தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி, அய்யப்பன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், துணை மேயர் தாமரைச்செல்வன், காங்., மாவட்டத் தலைவர் திலகர், ரமேஷ், ரவிக்குமார், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூ., மாவட்ட துணை செயலாளர் குளோப் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.