/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாசிக்கும் பழக்கம் இருந்தால் உயர்ந்த நிலைக்கு செல்லலாம் ஆச்சார்யா கல்வி நிறுவனங்களின் முதல்வர் பேச்சு

ADDED : செப் 07, 2024 06:53 AM

திட்டக்குடி : ஸ்ரீமுஷ்ணம் தவஅமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி நிறுவனங்கள் சார்பில் நடந்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவில், ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் முதல்வர் ஞானஅபிராமி செந்தில் பேசியதாவது:
இந்தியாவை உருவாக்கும் துாண்களாகிய மாணவர்களை உருவாக்குவதில் வீடு மற்றும் பள்ளி முக்கிய பங்காற்றுகிறது. மொபைல்போன் உபயோகிக்கும் பழக்கத்தால் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது.
மொபைல் போனில் கிடைக்கும் தகவல்களின் உண்மைத் தன்மை, துல்லியம் என்பது கேள்விக்குறி. ஆனால், செய்தித் தாள்களை படிப்பதால் உண்மையான, துல்லியமான தகவல்களைப் பெற முடியம்.
வீட்டில் மொபைல் போனை உபயோகிக்கும் போது பெற்றோர் திட்டுவார்கள், ஆனால் செய்தித்தாளை படித்தால் பாராட்டுவார்கள். செய்தித்தாள் படித்தாலே அறிவுசார்ந்த தகவல்களை மாணவர்கள் படிக்கிறார்கள் என பெற்றோர் எண்ணுவர்.
தமிழ் நாளிதழ்களில் 'தினமலர்' நாளிதழ், 73 ஆண்டுகால பாரம்பரியம் மிக்கது. பொதுமக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. ஆச்சார்யா பள்ளிகளில் மாணவர்கள் அறிவு, ஆற்றல், ஆளுமை, அதிவிசேஷ செயல்திறனுடன் உருவாக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் உயர்ந்த நிலையை அடைந்த அனைவருக்கும் வாசித்தல் என்னும் சிறந்த பழக்கம் இருந்தது. அந்த பழக்கம் இருந்ததால் தான் அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தார்கள்.
வெற்றி, தோல்வியைப் பற்றி யோசிக்காமல், தயக்கம் இல்லாமல் வாழ்க்கையில் வரும் சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் மிகப்பெரிய நிலையை அடைவதற்கு, நமக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும், நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஞானஅபிராமி செந்தில் பேசினார்.