/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிதானமாக எழுதினால் 'நீட்' தேர்வில் சாதிக்கலாம்
/
நிதானமாக எழுதினால் 'நீட்' தேர்வில் சாதிக்கலாம்
ADDED : ஏப் 29, 2024 03:57 AM

கடலுார் : நீட் தேர்வை நிதானமாக எழுதினால், நல்ல மதிப்பெண் பெற்று சாதிக்கலாம் என, ஸ்காலர் ஸ்பெக்ட்ரா அகாடமி மேலாண் இயக்குனர் சுரேஷ் கூறினார்.
கடலுாரில் தினமலர் நாளிதழ் மற்றும் ஸ்காலர் ஸ்பெக்ட்ரா நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட நீட் மாதிரி தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு அவர் கூறிய அட்வைஸ்:
நீட் தேர்வை நிதானமாகவும், பொறுமையாகவும் எழுதினால் நல்ல மதிப்பெண் கிடைக்கும். நீட் தேர்விற்கு ஒரு வாரம் உள்ளதால், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் உடல்நலனில் அக்கரை செலுத்த வேண்டும். தேர்வு அறையில் பதட்டம் கூடாது, அதற்காக, மாணவர்களுக்கு தினமலர் நாளிதழ் மற்றும் ஸ்காலர் ஸ்பெக்ட்ரா நிறுவனம் சார்பில், நீட் மாதிரி தேர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது, உங்களை நீங்களே பரிசோதித்துக்கொள்ள வாய்ப்பாக அமையும். நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை போன்றே, அனுபவம் மிக்க ஆசிரியர்கள் மூலம் கேள்விகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று நீட் தேர்வின்போது, கடைபிடிக்கப்படும் அனைத்து விஷயங்களும், மாதிரி தேர்வில் கடைபிடிக்கப்படுவதால் உங்களின் நீட் தேர்வு பயம் நீங்கும். உங்களை தேர்வுக்கு மேன்மேலும் தயார் படுத்திககொள்ள நல்ல வாய்ப்பு ஏற்படும். பெற்றோர்கள், தேர்வு எழுதும் குழந்தைகளை உளவியல் ரீதியான மகிழ்ச்சியான மன நிலையில், வைத்துக்கொள்ள வேண்டும்.
பிளஸ் 1, பிளஸ் 2 பாடப்பிரிவுகளில் இருந்து நீட் தேர்விற்கு கேள்விகள் கேட்கப்படுவதால் எந்த அச்சமும் தேவையில்லை. டாக்டர் தொழில் புனிதமானது என்று மாணவர்களுக்கு உணர்த்துவது பெற்றோர்களின் கடமை.
இவ்வாறு அவர் பேசினார்.

