/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராயர்பாளையம் ஊராட்சியில் ரூ. 17 லட்சத்தில் குடிநீர் டேங்க்
/
ராயர்பாளையம் ஊராட்சியில் ரூ. 17 லட்சத்தில் குடிநீர் டேங்க்
ராயர்பாளையம் ஊராட்சியில் ரூ. 17 லட்சத்தில் குடிநீர் டேங்க்
ராயர்பாளையம் ஊராட்சியில் ரூ. 17 லட்சத்தில் குடிநீர் டேங்க்
ADDED : செப் 02, 2024 09:34 PM

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த ராயர்பாளையம் ஊராட்சியில் ரூ. 17 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணியை ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார்.
பண்ருட்டி அடுத்த ராயர்பாளையம் ஊராட்சியில், 15 வது நிதிக்குழுவின் கீழ் ரூ. 17 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்க விழா நடந்தது.
நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் குணசுந்தரி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் யுவராணி, துணைத் தலைவர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார். துணைச் செயலாளர் முருகன் ,மாவட்ட பிரதிநிதி பூபாலன், வள்ளி, பரமசிவம், சம்பத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.