/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., கூட்டணியில் பா.ம.க.,விற்கு முக்கியத்துவம் கூட்டத்தில் இருந்து வெளியேறிய கூட்டணி கட்சிகள்

ADDED : மார் 28, 2024 11:16 PM
சிதம்பரம்: சிதம்பரம் ( தனி) தொகுதியை, பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., ஒதுக்க வலியுறுத்தினர். ஆனால், இறுதியாக பா.ஜ., போட்டியிடுவதாக அறிவித்து, வேலுாரை சேர்ந்த கார்த்தியாயிணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பா.ஜ., மாநில பொது செயலாளராக உள்ள கார்த்தியாயிணி, சிதம்பரம் தொகுதியில் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
நேற்று முன்தினம், பா.ஜ., சார்பில், சிதம்பரத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. அதில், வேட்பாளர் கார்த்தியாயிணி, கூட்டணி கட்சியில் உள்ள பா.ம.க., விற்கு மட்டும் முக்கியத்துவம் தரும் வகையில், அவரது பேச்சும், செயல்பாடும் இருந்துள்ளதாக மற்ற கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
மேடையில் அமர்ந்திருந்த ஒரு கட்சியின் மாவட்ட செயலாளரை, வேறு இடத்தில் மாறி உட்காருமாறு வேட்பாளரே சொல்லியதால் அக்கட்சியினர் வருத்தத்தோடு வெளியேறியதாக கூறப்படுகிறது. அதேபோல் த.மா.கா., கட்சியினரும் தங்களுக்கான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
தி.மு.க., மெகா கூட்டணியில், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவனை, எதிர்த்து களம் இறங்கியுள்ள பா.ஜ., அனைவரையும் அரவணைத்து தேர்தல் பணியாற்றி, வெற்றிக்காக பாடுபட வேண்டும் என கூட்டணி கட்சியினர் கூறி வருகின்றனர்.