/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வட்ட சட்ட பணிகள் சார்பில் பிரசார வாகன துவக்க விழா
/
வட்ட சட்ட பணிகள் சார்பில் பிரசார வாகன துவக்க விழா
ADDED : ஜூன் 27, 2024 03:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: சிதம்பரம் வட்ட சட்ட பணிகள் சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரசார வாகன துவக்க விழா நடந்தது.
நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி கார்த்திகேயன் தலைமை தாங்கி, பிரசார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த வாகனம் மூலம் கிராம பகுதி பொதுமக்களுக்கு அவர்களின் வழக்குகள் எளிய முறையில் சமரச வாயிலாக வழக்குகளை முடித்துக்கொள்ளலாம் என்பதை வலியுறுத்துவதற்காக இந்த விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் நடத்தப்படுகிறது.