ADDED : செப் 15, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையின் 2024-2025ம் ஆண்டிற்கான வேதியியல் மன்ற தொடக்க விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு துறைத்தலைவர் ஜெயபாரதி தலைமை தாங்கினார். வேதியியல் துறை பேராசிரியர் மணிகண்டன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வி.ஐ.டி., முன்னாள் பதிவாளர் சத்தியநாராயணன் சிறப்புரையாற்றினார்.
வேதியியல் துறை மாணவி பிரியதர்ஷினிக்கு, கருணாகரன் ஆராய்ச்சி குழு உதவித்தொகை சான்றிதழ் மற்றும் என்.எஸ்.எஸ்., முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.