/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் தொடர் மழை நவரை அறுவடை பாதிப்பு
/
மாவட்டத்தில் தொடர் மழை நவரை அறுவடை பாதிப்பு
ADDED : ஆக 12, 2024 05:37 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நான்காவது நாளாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. சித்திரை நவரை பட்ட நெல் அறுவடை பணிகள் பாதிப்பால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
காற்று வேகம் மாறுபாடு காரணமாக கடலுார் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் திடீரென கரு மேகமூட்டம் ஏற்பட்டு வெயில் குறைந்து காணப்படும். பின்னர் கடும் வெயில் தாக்கம் ஏற்படுகிறது.
மாவட்டத்தில் பருவ நிலை மாற்றத்தால், காற்று மாறுபாட்டிற்கு ஏற்ப அதிக அளவில் கருமேகம் உருவாகும் இடங்களில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கடலுார் மாவட்டம் முழுவதும் பரவலா கன மழை பெய்தது. அதேப்போன்று நேற்று மாவட்டத்தின் வடக்கு பகுதியில் பரவலாக மழை பெய்தது.
இதில் பண்ருட்டி 73 மி.மீ., வானமாதேவி 25.4, கடலுார் 11.2, கலெக்டர் அலுவலகம் 10, குடிதாங்கி 9, வடக்குத்து2, சிதம்பரம் 1 மி.மீ., அளவில் மழை பெய்துள்ளது.
தற்போது மாவட்டத்தில் சித்திரை பட்டம் நவரை நெல் சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடை செய்கின்றனர்.
இந்த மழையால் அறுவடை பாதிக்கப்பட்டு, நெல் ஈரப்பதம் மாறுகிறது. இருந்தபோதும் டெல்டா பகுதியில் புழுதி உழவுக்கு ஏற்ற மழையாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.