/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம்
/
வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஜூலை 19, 2024 05:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:கடலுார் மாவட்ட அனைத்து அரசு அலுவலகங்களில் இணைய வழியாக வருமான வரி தாக்கல் செய்தல் மற்றும் நிலுவை தொகையை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கடலுாரில் நடந்த கூட்டத்திற்கு, புதுச்சேரி வருமான வரி அலுவலர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். கடலுார் மாவட்ட கருவூல அலுவலர் சுஜாதா வரவேற்றார். வருமான வரித்துறை அதிகாரிகள் ராஜாராம், செந்தில்குமார், தீபன்குமார், வருமான வரித்துறை ஆய்வாளர் சிற்றரசன், முதுநிலை உதவியாளர் தயாநிதி ஆகியோர் வருமான வரி தொர்டபான விழிப்புணர்வு குறித்து பேசினார். அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உதவி கருவூல அலுவலர் பாபு நன்றி கூறினார்.