ADDED : ஆக 16, 2024 11:14 PM

கடலுார்: கடலுார் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தின விழா நடந்தது.
முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகர் தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றினார். விழாவில், நீதிபதிகள் ஆனந்தன், பிரகாஷ், லட்சுமி ரமேஷ், வித்யா, நாகராஜன், அன்வர் சதாத், கவியரசன், வனஜா, பத்மாவதி, பார் அசோசியேஷன் தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர் செந்தில்குமார், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் அமுதவள்ளி, செயலாளர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கடலுார் அடுத்த கே.என்.பேட்டை அன்னை அலமேலு முதியோர் இல்லத்தில், மாதர் நல தொண்டு நிறுவனம் சார்பில் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் பெருமாள் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றினார். மது போதைப்பொருள் ஒழிப்பதற்கான உறுதிமொழியேற்று மரக்கன்று நடப்பட்டது. தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமதி ராஜேந்திரன் நன்றி கூறினார்.
கடலுார், கே.என்.பேட்டை பவானி அம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு விருந்தினர்களாக பவானி ஜெயராம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஜெயராமன், தாளாளர் நாராயணன் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மந்தாரக்குப்பம்
விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த விழாவில்  மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை கல்விக் குழும நிறுவனர் ஜெய்சங்கர் தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து மாணவர்களின்  கலை நிகழ்ச்சி நடந்தது. தொழுதுார் ஜெயப்பிரியா கீரின் பார்க்  பள்ளியில் இயக்குனர்  தினேஷ்  தேசிய கொடியை  ஏற்றினார்.
விருத்தாசலம்
விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தேசிய கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தண்டபாணி தேசியக் கொடியேற்றினார்.
மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் நடந்த பொது விருந்தை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், ஊராட்சித் தலைவர் நீதிராஜன், முன்னாள் அரசு வழக்கறிஞர் விஜயகுமார், கவுன்சிலர் சிங்காரவேல் உடனிருந்தனர்.
புவனகிரி
மேல் புவனகிரி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் சிவப்பிரகாசம், கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் கனிமொழிதேவதாஸ் படையாண்டவர் தேசிய கொடியை ஏற்றினர்.
புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் சேர்மன் கந்தன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். கிராம ஊராட்சிகளான அம்பாள்புரத்தில் ஊராட்சித் தலைவர் விசுவேல்முருகன், அழிச்சிக்குடியில் ஊராட்சித் தலைவர் அமிர்தவள்ளி கலியமூர்த்தி தேசியக் கொடி ஏற்றினர்.
நெல்லிக்குப்பம்
நெல்லிக்குப்பம் நகராட்சியில் கமிஷனர் கிருஷ்ணராஜன் முன்னிலையில் சேர்மன் ஜெயந்தி தேசிய கொடியேற்றினார். மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் செயல் அலுவலர் சண்முகசுந்தரி முன்னிலையில் தலைவர் ஜெயமூர்த்தி கொடியேற்றினார்.
விருத்தாசலம்
ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஓய்வு பெற்ற டி.இ.ஓ., சுசீலா தேசிய கொடியினை ஏற்றினார். தாளாளர் விஸ்வநாதன் வரவேற்றார்.
ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன், இளம் செஞ்சிலுவை சங்கம், தேசிய பசுமை படைக்கான கொடியினை ஏற்றி, சங்கத்தினை துவக்கி வைத்தார். பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

