/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்று இடத்தில் சர்வதேச மையம் அமைக்க வலியுறுத்தல்
/
மாற்று இடத்தில் சர்வதேச மையம் அமைக்க வலியுறுத்தல்
UPDATED : மார் 22, 2024 12:51 PM
ADDED : மார் 22, 2024 12:51 AM
வடலுார்: வடலுாரில் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதை கைவிட, சன்மார்க்க அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
வடலுாரில், சன்மார்க்க அமைப்புகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டமைப்பு தலைவர் பாபு தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் ஜானகிராமன், வேதாச்சலம், ஆறு முகம் முன்னிலை வகித்தனர். நிர்வாகி ராமகிருஷ்ணன் வரவேற்றார்.
தஞ்சாவூர், மதுரை, தேனி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வடலூர் பார்வதிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சன்மார்க்க அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வடலூரில் வள்ளளார் சர்வதேச மையம் அமைவதை இக்கூட்டமைப்பு வரவேற்கிறது, அதே நேரத்தில் வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைவதை தவிர்த்து வேறு இடத்தில் அமைக்க வேண்டும், இதனை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம், பிரசாரக் கூட்டம் நடத்துவது, நீதிமன்றத்துக்கு செல்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

