ADDED : ஜூலை 18, 2024 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் தீயணைப்பு நிலையத்தில், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
கடலுார் பீச் ரோட்டில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தீயணைப்பு நிலையத்தில் உள்ள வாகனங்கள், உபகரணங்கள் பராமரிப்பு மற்றும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனரா என ஆய்வு செய்தார்.
ஆய்வை முன்னிட்டு, தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் அணிவகுத்து நின்றிருந்தனர்.