/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதுநகரில் சாலைப்பணி மேயர், கமிஷனர் ஆய்வு
/
முதுநகரில் சாலைப்பணி மேயர், கமிஷனர் ஆய்வு
ADDED : ஆக 13, 2024 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் முதுநகர் பகுதிகளில் சாலை மற்றும் பாதாள சாக்கடை பணிகளை மேயர் சுந்தரி மற்றும் கமிஷனர் அனு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கடலுார் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர், சாலை, வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கடலுார் முதுநகர் பகுதியில் சாலை, பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கமிஷனர் அனு ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, மாநகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன், மண்டல குழு தலைவர் இளையராஜா, கவுன்சிலர் கவிதா ரகுராமன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.