ADDED : ஜூன் 18, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் புதிய இன்ஸ்பெக்டர் நேற்று பொறுப்பேற்றார்.
நடுவீரப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு முதல் இன்ஸ்பெக்டராக சுரேஷ்குமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார்.பதவி ஏற்ற சில மாதத்திலேயே எஸ்.பி., அலுவலக இன்ஸ்பெக்டராக பணி மாறுதல் பெற்று சென்றார்.
இதனால் நடுவீரப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பணி இடம் காலியாக இருந்து வந்தது. இந்நிலையில், சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணி செய்து வந்த நந்தகுமார்,நேற்று நடுவீரப்பட்டு ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.
