/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவர்களுக்கு வழங்க சைக்கிள் பொருத்தும் பணி தீவிரம்
/
மாணவர்களுக்கு வழங்க சைக்கிள் பொருத்தும் பணி தீவிரம்
மாணவர்களுக்கு வழங்க சைக்கிள் பொருத்தும் பணி தீவிரம்
மாணவர்களுக்கு வழங்க சைக்கிள் பொருத்தும் பணி தீவிரம்
ADDED : ஆக 01, 2024 06:58 AM

கடலுார்: கடலுாரில் பிளஸ் 1 மாணவ, மாணவியர்களுக்கு வழங்குவதற்கான இலவசசைக்கிள்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால்இலவச சைக்கிள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்கடலுார் மாவட்டத்தில் கடந்த 2024--25ம் கல்வி ஆண்டில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த சைக்கிள்களுக்கான உதிரி பாகங்கள் வடமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு ஆங்காங்கே பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை பொருத்தும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடலுார் மாநகராட்சியில் மஞ்சக்குப்பம் செயிண்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைக்கிள்களின் உதிரி பாகங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, சைக்கிள்கள் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.