ADDED : ஜூன் 28, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
கடலுார்: நெய்வேலியில் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை சொரத்துார் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
நெய்வேலி தொகுதி மருங்கூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது.
முகாமினை சொரத்துார் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முகாமிற்கு தலைமை தாங்கி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார்.
மருங்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் அறிவொளி முன்னிலை வகித்தார். நெய்வேலி முன்னாள் எம்.எம்.ஏ., சிவசுப்பரமணியன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ராஜசேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் கமலகண்ணன், துணை செயலாளர் அண்ணாமலை, பெருமாள், அ.தி.மு.க., மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் மருங்கூர் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
