ADDED : மே 12, 2026 05:10 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் அரசு தலைமை மருத்துவமனையின் செவிலியர் பயிற்சி பள்ளியில் உலக செவிலியர் தின விழா நடந்தது.
நலப்பணிகள் இணை இயக்குனர் பிரமிளா தலைமை தாங்கினார். நிலைய மருத்துவ அதிகாரி கவிதா, கண்காணிப்பாளர் தம்பையா முன்னிலை வகித்தனர். செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் கண்ணன் வரவேற்றார்.
செவிலியர்கள் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் விழாவை கொண்டாடினர். மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி நோயாளிகளுக்கு சிறப்பு சேவை வழங்குவோம் என, உறுதிமொழி ஏற்றனர்.
விழாவில், செவிலியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.
