/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் இயற்கை வளங்கள் அழிப்பை கண்டித்து போராட்டம் சவுமியா அன்புமணி பேட்டி

ADDED : பிப் 10, 2025 05:27 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் இயற்கை வளங்கள், மரங்கள் அழிக்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கூறினார்.
கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தபின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடலுார் மாவட்டத்தில் இயற்கை வளங்கள் அழிப்புக்கு எதிராக பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது மலையடிக்குப்பம் பகுதிகளில் முந்திரி மரங்கள் வெட்டப்படுவது குறித்து கட்சித் தலைவருடன் ஆலோசித்து போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.