/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர அழைப்பு
/
அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர அழைப்பு
ADDED : ஜூன் 12, 2024 11:59 PM
விருத்தாசலம் : விருத்தாசலம் அஞ்சல் கோட்டத்தில் நாளை முதல் அஞ்சல் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம் நடக்கிறது.
அஞ்சல் கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விருத்தாசலம் அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து தலைமை, துணை மற்றும் கிளை அஞ்சல் அலுவலகங்களில் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் ஆகிய திட்டங்களில் சேருவதற்கான சிறப்பு முகாம் நாளை (14ம் தேதி) முதல் 30ம் தேதி வரையில் நடக்கிறது.அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் குறைவான பிரீமியம் வசூல் செய்யப்பட்டு,அதிக போனஸ் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள், நிகர்நிலை பல்கலை., ஊழியர்கள்,அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர்கள், டாக்டர்கள், பொறியாளர்கள், அனைத்து பட்டபடிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ முடித்தவர்கள் சேரலாம்.
மேலும், கிராம மக்கள் நல மேம்பாட்டிற்காக பிரத்யேகமாக கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளது. இத்திட்டங்களில் 18 வயது முதல் 55 வரை உள்ளவர்கள் சேரலாம். முதிர்வுத் தொகைக்கு முழுமையான வருமான வரிவிலக்கு உண்டு.