/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க.,உறுப்பினர் அட்டை வழங்கல்
/
அ.தி.மு.க.,உறுப்பினர் அட்டை வழங்கல்
ADDED : ஆக 04, 2024 12:22 AM

சிதம்பரம்: கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், புதிய உறுப்பினர் அட்டையை எம்.எல்.ஏ., பாண்டியன் வழங்கி துவக்கி வைத்தார்.
சிதம்பரத்தில், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ., முருகுமாறன், அம்மா பேரவை துணை செயலாளர பாலமுருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் சுந்தர், ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளார் பாண்டியன் எம்.எல்.ஏ., புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கி பேசினார். நிகழ்வில் நிர்வாகிகள் ரெங்கம்மாள், செல்வம், சுந்தரமூர்த்தி, அசோகன், வாசு முருகையன், ஜோதிபிரகாஷ், சிவக்குமார், நவநீதகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., தாசன், தமிழரசன், பூமாலை கேசவன், சங்கர் ,மாரிமுத்து, சண்முகம், கோபி, குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.