/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்
/
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்
ADDED : ஆக 13, 2024 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர்: வேப்பூரில் அ.தி.மு.க., புதிய உறுப்பினர் அட்டைகளை அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
வேப்பூரில், நல்லுார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் பச்சமுத்து தலைமை தாங்கினார். அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
மாவட்ட தலைவர் தங்கராசு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ரமேஷ், மருத்துவரணி மாவட்ட பொருளாளர் சம்பத், கிளை செயலாளர் குமரேசன், மாவட்ட பிரதிநிதி பழனிசாமி, நிர்வாகிகள் காந்தி, பாஸ்கர், மல்லன் உட்பட பலர் பங்கேற்றனர்.

