/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
/
அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
ADDED : ஆக 27, 2024 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை கிராமத்தில் அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி உறுப்பினர் அட்டை வழங்கினார். அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற மாநில செயலாளர் முருகுமணி, மாவட்ட ஜெ., பேரவைச் செயலாளர் உமா மகேஸ்வரன், மாவட்ட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, சிவஞானம் முன்னிலை வகித்தனர்.
கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர்கள் இளங்கோவன், குமார், சக்கரவர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.