/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்
/
அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்
அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்
அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்
ADDED : ஆக 16, 2024 06:13 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி ஊராட்சியில் அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும்நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட இணை செயலாளர் ரெங்கமாள் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவர் குமார், ஒன்றிய செயலாளர் அசோகன், மாவட்ட துணை செயலாளர் செல்வம், பரங்கிப்பேட்டைகூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமிவரவேற்றார்.
அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு, பாண்டியன் எம்.எல்.ஏ., உறுப்பினர் அட்டை வழங்கினார். குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், வசந்தி சுதந்திரதாஸ், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், ஊராட்சி தலைவர் சிவசங்கரி மகேஷ், புவனகிரி இளைஞரணி செயலாளர் செழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.