/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்
/
அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்
அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்
அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்
ADDED : ஆக 27, 2024 04:08 AM

காட்டுமன்னார்கோவில் : குமராட்சி கிழக்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க., சார்பில், உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடந்தது.
ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் ரங்கம்மாள், துணைச் செயலாளர் செல்வம், ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி முன்னிலை வகித்தனர். ஒன்றிய சேர்மன் ராமலிங்கம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மோகன், செங்குட்டுவன், ரவி ஜவான்குமார், குணசேகரன், சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பொருளாளர் சுந்தரம் நன்றி கூறினார்.