/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுகாதார வளாகங்கள் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் அவலம்
/
சுகாதார வளாகங்கள் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் அவலம்
சுகாதார வளாகங்கள் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் அவலம்
சுகாதார வளாகங்கள் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் அவலம்
ADDED : ஆக 12, 2024 05:46 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அம்பேத்கர் நகரில் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வராமல் பாழாகி வருகிறது.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் பல கோடி செலவில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன.அவற்றில் பல பயன்பாட்டுக்கு வராமலேயே பாழாகி வருகிறது.சுகாதார வளாகங்களை பரமாரிக்க தலா 7 ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கி வருகின்றனர். ஆனால் பல இடங்களில் பயன்படாமலேயே உள்ளது.
மேல்பாதி அம்பேத்கர் நகரில் இரண்டு வருடத்துக்கு முன் பல லட்சம் செலவில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.ஆனால் தண்ணீர் வசதி இல்லாததால் திறக்கபடவில்லை.
அதற்காக ரூ.8 லட்சம் செலவில் ஆழ்துளைகிணறு அமைத்ததோடு தங்கள் வேலை முடிந்ததாக அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
இதனால் சுகாதார வளாகம் புதர்கள் மண்டி பாழாகிறது. மக்கள் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துவதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது.உடனடியாக செயல்படாத சுகாதார வளாகங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது நல்லது.

