sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாமானியர்களையும் சாதனையாளராக்கும் ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி

/

சாமானியர்களையும் சாதனையாளராக்கும் ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி

சாமானியர்களையும் சாதனையாளராக்கும் ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி

சாமானியர்களையும் சாதனையாளராக்கும் ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி


ADDED : மே 28, 2024 11:26 PM

Google News

ADDED : மே 28, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்வி கற்பித்தலோடு, மாணவர்களின் தனித்திறன் பயிற்சிக்கு முக்கியத்துவம் தரும் பள்ளியாக ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளிகள் உள்ளதாக, பள்ளி குழும தலைவர் ஜெய்சங்கர் தெரிவித்தார்,

மேலும் அவர் கூறியது:

தொடர்ந்து இந்த ஆண்டும் பொது தேர்வுகளில் 100 சதவிகித தேர்ச்சியும், சிறப்பான மதிப்பெண்கள் பெற்று, கல்வி மாவட்டத்தில் முதன்மையிடம் பிடித்து, மெட்ரிக் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 496 மதிப்பெண்களும், பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் 589 மதிப்பெண்களும், சி.பி.எஸ்.இ பொது தேர்வில், பத்தாம் வகுப்பில் 491, பிளஸ் 2 வகுப்பில் 479 மற்றும் நீட் தேர்வில் 653 மதிப்பெண்களும் பெற்று தொடர் சாதனை செய்து வருகிறது.

கல்வியில் தொடர் சாதனை செய்து வரும் ஜெயப்பிரியா வித்யாலயாவில் சூப்பர் 30 என்ற பிரத்தியேக குழு செயல்படுகிறது.

விருத்தாசலம் பூந்தோட்டத்தில் ஜெயப்பிரியா வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி காற்றோட்டமான அமைதியான சுற்றுச்சூழலுடன் இயங்கி வருகிறது. 2014ம் ஆண்டு இப்பள்ளி தொடங்கப்பட்டு, சாமானி யர்களையும் சாதனையாளர்களாக உருவாக்கி வருகிறது.

கிராமப்புற மாணவர்கள் பயன்பெற விருத்தாச்சலம் கோபாலபுரத்தில் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தொடங்கப் பட்டது.

தொடர்ந்து, வேப்பூர் - திருப்பயரில் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நெய்வேலி - வடக்குத்தில் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜெயப்பிரியா பப்ளிக் பள்ளி தொடங்கப்பட்டது.

தொடர்ந்து, தொழுதூர் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிரீன் பார்க் இன்டர்நேஷனல் பள்ளி, வடலூர் திரிபுர நேனி வித்யாலயா மெட்ரிக் பள்ளி என, எட்டு கல்விக் குழுமங்களின் வழி சர்வதேச கல்வி தரத்தைத் உயர்த்தி உள்ளது.

மாணவர்கள் பாதுகாப்பிற்காக பள்ளி முழுவதும் சி.சி.டி.வி., கேமரா, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வீட்டு முறையில் தயாரிக்கப்படும் சைவ, அசைவ உணவு வகைகளுடன் கூடிய விடுதி வசதி, நவீன அறிவியல் ஆய்வகம், மொழியியல் ஆய்வகம், நூலகம், செயல்வழி கற்றல் மற்றும் காட்சி வழி கற்றல், அனைத்து வழித்தடங்களிலும் பஸ் வசதி உள்ளது. நீட், ஜே.இ.இ., பயிற்சிகளின் மூலம் எண்ணற்ற மருத்துவர்களையும், பொறியாளர்களையும், தொழில் நுட்ப வல்லுநர் களையும் உருவாக்கி சாதனை படைத்து வருகிறது.

கல்வி கற்பித்தலோடு நின்றுவிடாமல் மாணவர்களின் தனித்திறன் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் தரும் பள்ளியாக விளங்குகிறது.

அதேபோல் ஸ்போக்கன் இங்கிலீஷ், ஸ்போக்கன் ஹிந்தி, அபாகஸ் போன்ற சிறப்பு பயிற்சி அளித்து, தலைசிறந்த மாணவர்களை உருவாக்கி வருகிறோம்.






      Dinamalar
      Follow us