/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி சாதனை
/
ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி சாதனை
ADDED : மே 07, 2024 04:00 AM

மந்தாரக்குப்பம் : ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சியும், அறிவியல் பிரிவில் 589 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர்.
கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சிவரஞ்சனி அறிவியல் பிரிவில் 589 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், தொழுதூர் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நிவேதா, வணிகவியல் பிரிவில் 585 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், கோபாலபுரம் பள்ளி மாணவி திவ்யதர்ஷினி வணிகவியல் பிரிவில் 583 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
மேலும், 21 மாணவர்கள் 550 க்கும் அதிகமாகவும், 60 மாணவர்கள் 500 க்கும் அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கணிதத்தில் 11 மாணவர்கள், கணினி அறிவியலில் 16, வேதியியலில் 14, இயற்பியலில் 12, மாணவர்கள், உயிரியலில் 8, பொருளியல் பாடத்தில் 5, வணிகவியலில், கணக்குப்பதிவியல் தலா 5, கணினி பயன்பாடுகளில் 14 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை மாணவர்களை, ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமங்களின் தலைவர் ஜெய்சங்கர், பள்ளி இயக்குனர் தினேஷ் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்தினர்.
நிகழ்ச்சியில் ஜெயப்பிரியா பள்ளிகளின் முதல்வர்கள் சுதர்சனா, மகேஸ்வரி, ரேவதி, சூப்பர் 30 பிரிவின் தலைவர் கார்த்திகேயன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.