/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகை செய்யும் தொழிலாளி தற்கொலை; போலீசை கண்டித்து போராட்டம்
/
நகை செய்யும் தொழிலாளி தற்கொலை; போலீசை கண்டித்து போராட்டம்
நகை செய்யும் தொழிலாளி தற்கொலை; போலீசை கண்டித்து போராட்டம்
நகை செய்யும் தொழிலாளி தற்கொலை; போலீசை கண்டித்து போராட்டம்
ADDED : செப் 02, 2024 06:56 AM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில், போலீஸ் தாக்கிய அவமானத்தில் நகை செய்யும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதாக கூறி, மா.கம்யூ., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த உடையார்குடி தியாகராஜ பிள்ளை தெருவை சேர்ந்தவர் காமராஜ், 50; நகை செய்யும் தொழிலாளி. நேற்று முன்தினம் பெரியார் நகரில் நண்பர் வீட்டில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு வீட்டின் அருகே சிறுநீர் கழிக்க சென்றபோது, அவரை மர்ம நபர் நடமாடுவதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர், போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில், அங்கு வந்த போலீசார், காமராஜின் மொபைல் போனை பிடுங்கிக் கொண்டு, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின், வீடு திரும்பிய அவர் தனது மகன் சந்தோைஷ அழைத்துக் கொண்டு, போலீசாரிடம் சென்று, தாக்கியது குறித்து கேட்டுள்ளார். இருவரையும் போலீசார் கண்டித்து அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, தனது நகை பட்டறைக்கு சென்ற காமராஜ், சயனைடு குடித்து மயங்கி விழுந்தார். உடன், அவரை சந்தோஷ் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் இறந்தார்.
இந்நிலையில், காமராஜ் இறப்பிற்கு போலீஸ்தான் காரணம். எனவே, இறந்த காமராஜ் குடும்பத்திற்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு தலைமையில், மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள், காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை எதிரில் திரண்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.
அதனைத் தொடர்ந்து காமராஜின் மகன், சந்தோஷ் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், 'போலீசார் தாக்கியதால் அவமானத்தில் தனது தந்தை தற்கொலை செய்து கொண்டார். தந்தையின் இறப்புக்கு காரணமாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென' கூறப்பட்டிருந்தது.