/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வழக்கறிஞர் சங்கங்களில் கூட்டுக்குழு பொதுக்கூட்டம்
/
வழக்கறிஞர் சங்கங்களில் கூட்டுக்குழு பொதுக்கூட்டம்
ADDED : ஜூலை 15, 2024 11:54 PM
விருத்தாசலம்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு அவசர பொதுக்குழு கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது.
மாநில தலைவர் நந்தகுமார், பொதுச்செயலர், பன்னீர்செல்வம், பொருளாளர் ரவி, விருதை பார் அசோசியேசன் தலைவர் விஜயகுமார், செயலர் ரமேஷ், அட்வகேட் அசோசியேசன் தலைவர் சதீஷ், செயலர் சுரேஷ், கூட்டுக்குழுவின் மாநில இணைச்செயலர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் புஷ்பதேவன், ஒருங்கிணைப்பாளர் ராஜூ, பார் அசோசியேஷன் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர், செயலர் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற கோரி, வரும் 30ம் தேதி வரை, நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது, வரும் 16ம் தேதி, மூன்று சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தமிழகம் முழுவதும் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்துவது.
மேலும், இந்த மாத இறுதிக்குள் தமிழக வழக்கறிஞர்கள் டில்லி சென்று பார்லிமென்ட் கூட்டதொடரில் இரண்டு நாட்கள் போராட்டம் நடத்துவது.
மேலும், அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து, சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.