/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொரப்பாடி பேரூராட்சியில் ஜெ., பிறந்த நாள் விழா; மாஜி அமைச்சர் சம்பத் ரூ.20 லட்சம் நலத்திட்ட உதவி
/
தொரப்பாடி பேரூராட்சியில் ஜெ., பிறந்த நாள் விழா; மாஜி அமைச்சர் சம்பத் ரூ.20 லட்சம் நலத்திட்ட உதவி
தொரப்பாடி பேரூராட்சியில் ஜெ., பிறந்த நாள் விழா; மாஜி அமைச்சர் சம்பத் ரூ.20 லட்சம் நலத்திட்ட உதவி
தொரப்பாடி பேரூராட்சியில் ஜெ., பிறந்த நாள் விழா; மாஜி அமைச்சர் சம்பத் ரூ.20 லட்சம் நலத்திட்ட உதவி
ADDED : மார் 04, 2025 06:51 AM

பண்ருட்டி; தொரப்பாடி பேரூராட்சி அ.தி.மு.க.சார்பில் ஜெ.பிறந்த நாளை முன்னிட்டு ரூ.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் முன்னாள் அமைச்சர் சம்பத் வழங்கினார்.
பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சியில் அ.தி.மு.க.சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ.பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஜெ.,பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார்.
மாநில தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், தலைமை கழக பேச்சாளர் ரங்கநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சம்பத் பேசுகையில் முன்னாள் முதல்வர் ஜெ. மகளிருக்காக தாலிக்கு தங்கம், விலையில்லா கறவை மாடு, மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிகணினி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால் தற்போது தி.மு.க., அரசு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு முன்னாள் முதல்வர் ஜெ. கொண்டு வந்த நலத்திட்டங்களை நிறுத்திவிட்டனர். மேலும் சொத்துவரி, மின்கட்டணம் உள்ளிட்டவை உயர்த்தி மக்களை வாட்டி வதைத்து வருகின்றனர்.
தி.மு.க., ஆட்சி ஒட்டுமொத்த மக்களும் வெறுக்ககூடிய ஆட்சியாக உள்ளது. மற்ற மாநிலங்கள் வளர்ச்சி அடைவதற்காக கடன் பெற்று ஆட்சி நடத்துகின்றனர். ஆனால் தி.மு.க. தலைவர் கடன் பெற்று ஊழல் செய்து வருகிறார்.
தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். அ.தி.மு.க.ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு தி.மு.க.,ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் தயராக இருக்க வேண்டும் என்றார்.
பின் முன்னாள் அமைச்சர் 20 லட்சம் மதிப்பில் ஏழை, எளிய பெண்கள் 2 ஆயிரம் பேருக்கு சேலைகள், 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின் மாற்றுக்கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதில் மீனவர் பிரிவு இணை செயலாளர் தங்கமணி, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட அவைத் தலைவர் சேவல்குமார், மாவட்ட துணை செயலாளர் தெய்வபக்கிரி, அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, நாகபூஷணம், கடலுார் தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன், பகுதி செயலாளர் கந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்ரீநாத், மாவட்ட ஒட்டுநர் அணி செயலாளர் சுந்தர்ராஜன், பண்ருட்டி நகர துணை செயலாளர் மோகன்.
தொரப்பாடி பேரூர் அவை தலைவர் சுந்தரம், பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் ராமலிங்கம், பேரவை செயலாளர் சேகர், இளைஞர் அணி துணை செயலாளர் சுரேஷ், எம்.ஜி.ஆர்.மன்ற கணேசன், ஒன்றிய அவை தலைவர் பாண்டியன், துணை செயலாளர்கள் சவுந்தர்ராஜன், முருகன், அருண், தகவல் தொழில்நுட்ப புஷ்பராஜ், வைரமணி, ஒறையூர் முன்னாள் ஊராட்சி தலைவர் புஷ்பாவதி சிவசந்திரன், சின்னபேட்டை முன்னாள் தலைவர் முருகன், ஒன்றிய பொருளாளர் கோதண்டம், கணபதி, சிவா, கரண்,ஐயப்பன், ஆறுமுகம், சதாசிவம்,நாகரத்தினம், முருகையன், மணப்பாக்கம் தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.