ADDED : மார் 04, 2025 06:51 AM

விருத்தாசலம்; விருத்தாசலம் வானொலி திடலில் ஜெ., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். நகர துணை செயலர் அரங்க மணிவண்ணன், வழக்கறிஞரணி மாவட்ட செயலர் விஜயகுமார், எம்.ஜி.ஆர்., அணி செயலர் முருகுமணி, மாவட்ட ஜெ., பேரவை செயலர் உமா மகேஸ்வரன், மாவட்ட துணை செயலர் ரவிச்சந்திரன், தகவல் தொழிநுட்ப பிரிவு மண்டல செயலர் வழக்கறிஞர் அருண் முன்னிலை வகித்தனர். மாநில ஜெ., பேரவை செயலர் அருள் அழகன் வரவேற்றார்.
முன்னாள் அமைச்சர் சண்முகம், மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் காரியாபட்டி கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினர். மாவட்ட அமைப்பு சார ஓட்டுனர் அணி செயலர் திருப்பதி, நகர ஜெ., பேரவை செயலர் அருள், ஒன்றிய செயலர்கள் வேல்முருகன், பச்சமுத்து, தம்பிதுரை, பாலமுருகன், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் கனகசிகாமணி, மாவட்ட ஜெ., பேரவை செயலர் மணிமாறன், புஷ்பா வேங்கடவேணு, தங்கராஜ், முக்தார் அலி, கண்ணன், உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட மாணவர் அணி செயலர் ஆனஸ்ட்ராஜ் நன்றி கூறினார்.