/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இயற்கை பொருள் பயன்படுத்த வேண்டும் நீதிபதி அன்வர் சதாத் அறிவுரை
/
இயற்கை பொருள் பயன்படுத்த வேண்டும் நீதிபதி அன்வர் சதாத் அறிவுரை
இயற்கை பொருள் பயன்படுத்த வேண்டும் நீதிபதி அன்வர் சதாத் அறிவுரை
இயற்கை பொருள் பயன்படுத்த வேண்டும் நீதிபதி அன்வர் சதாத் அறிவுரை
ADDED : ஜூன் 01, 2024 06:39 AM

கடலுார், : கடலுார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்த சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் வசந்தராயன்பாளையம் பசுமை உரக்குடிலில் நடந்தது.
முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகர் உத்தரவின்படி நடந்த முகாமில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் அன்வர் சதாத் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர் வரவேற்றார். சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் அன்வர் சதாத் பேசுகையில், 'இன்றைய காலக் கட்டத்தில் திடக் கழிவுகளால் மண்ணுக்கும் அனைத்து உயிர்களுக்கும் பாதிப்பு உள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கை பொருட்களை பயன்படுத்த எதிர்கால சந்ததியினருக்கு கற்றுத் தர வேண்டும். இதன் மூலமாக எதிர்கால சந்ததியினரை இயற்கையான சூழலில் வாழ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்றார். மாநகராட்சி கமிஷனர் காந்திராஜ் திடக்கழிவு மேலாண்மை குறித்த திட்டங்களை எடுத்துக் கூறினார். சையத் ரஷீத் நன்றி கூறினார்.