/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நீதிபதி சந்துரு அறிக்கையை ஏற்கக்கூடாது: இந்து மக்கள் கட்சி ஆர்.டி.ஓ.,விடம் மனு
/
நீதிபதி சந்துரு அறிக்கையை ஏற்கக்கூடாது: இந்து மக்கள் கட்சி ஆர்.டி.ஓ.,விடம் மனு
நீதிபதி சந்துரு அறிக்கையை ஏற்கக்கூடாது: இந்து மக்கள் கட்சி ஆர்.டி.ஓ.,விடம் மனு
நீதிபதி சந்துரு அறிக்கையை ஏற்கக்கூடாது: இந்து மக்கள் கட்சி ஆர்.டி.ஓ.,விடம் மனு
ADDED : ஜூன் 25, 2024 05:05 AM

விருத்தாசலம் : ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையை ஏற்கக்கூடாது என, விருத்தாசலம் ஆர்.டி.ஓ.,விடம் இந்து மக்கள் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் கதிர்வேல், மாவட்ட பொருப்பாளர்கள் பழனிவேல், பாலுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், விருத்தாசலம் ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத்திடம் கொடுத்துள்ள மனு:
பள்ளி, கல்லுாரிகளில் ஜாதி அடையாளங்களை களைய தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான தனிநபர் விசாரணைக்குழு, தமிழக முதல்வரிடம் அளித்துள்ள அறிக்கை இந்து சமய நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
இந்து சமய நம்பிக்கை அடையாளமான காப்பு, கயிறு கட்டுதல், திலகம் இடுதல், பூ வைத்தல் போன்றவைகளை தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளது. இது ஜாதிக்கென்று தனிப்பட்ட அடையாளப்படுத்தக் கூடிய கயிறுகள் இல்லை.
மாற்று மதத்தை சார்ந்தவர்கள் சிலுவை, ஹிஜாப் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இந்து சமயத்தில் உள்ள அடையாளங்களை மட்டும் நீக்க வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கது.
பள்ளிக்கல்வித்துறை பாடநுால் கழகம் சார்பில் நடப்பாண்டு மூன்றாம் வகுப்பு தமிழ் பாடத்தில் அனைவரும் கைகோர்த்து சம ரீதியாக நிற்பது போன்ற புகைப்படத்தில் இஸ்லாமிய மத அடிப்படை அடையாள சின்னங்கள் மட்டும் இடம் பெற்றுள்ளது. மீதமுள்ள குழந்தைகளின் சமய அடையாள சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. மேற்கண்ட பாடத்திட்டத்தில் இருந்து அந்த பகுதியை நீக்க வேண்டும்.
மத, ஜாதி ரீதியாக பிளவுபடுத்தக் கூடிய நீதிபதி சந்துரு விசாரணைக்குழு அறிக்கையை தமிழக அரசும், பள்ளி கல்வித்துறையும் ஏற்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.